Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

May 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது என்று அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இனப்படுகொலை செய்யப்பட்ட எமது இனத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியள்ளது. மே 18 இனவழிப்பு நினைவேந்தல் நாளில் எனது அஞ்சலியை தெரிவிக்கிறேன். அத்துடன் தமிழர்களின் நினைவேந்தல் உரிமை குறித்து உலகம் தமது கரிசனையை வலுப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

நினைவேந்தல் உரிமை என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும். போர்கள் நடந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் மேம்பாட்டிற்காக நினைவேந்தல் உரிமை உதவுகிறது. மோதல்கள் நடந்த நாடுகளில் நிலைமாறுகால நீதியாக கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறதலுக்கான வழிமுறையாக நினைவேந்தல் முக்கிய வழிமுறையாகிறது

இலங்கையில் மரபுகளையும் ஞாபகங்களையும் நினைவுகளையும் அழிப்பதை ஒரு இனழிவப்பாக ஶ்ரீலங்கா அரசு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கையாண்டு வருகிறது. 1981இல் யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் அறிவுடமையை அழிப்பதுடன் அவர்களின் அடையாளத்தையும் அழிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டது.

போரில் ஆலயங்கள், மரபுரிமை மையங்கள் என தொன்மைச் சான்றுகளை இலங்கை அரசு அழித்து வந்துள்ளது. போரின் நினைவிடங்களாக அமைந்த மாவீர்ர் துயிலும் இல்லங்கள் போரின் சாட்சியாகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுச் சேகரிப்பு இடங்களாகவும் இருக்கின்றன. மாவீரர் துயிலும் இல்லங்களும் உளவியல் ஆற்றுப்படுத்தலைச் செய்கின்ற நினைவிட உரிமையின் முக்கிய மையங்கள் ஆகும்.

போரின் இறுதியில் இலங்கை அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை திட்டமிட்டு புல்டொசர் கொண்டு அழித்த்து. இது எங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மனத்தாக்கங்களை உருவாக்கியது. அதனால்தான் போரில் வென்ற அரசினால் தமிழ் மக்களை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

2021ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இலங்கை அரசு இரவோடு இரவாக அழித்த நிகழ்வு உலகத் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி பன்னாட்டுச் சமூகத்திலும் பெரும் அதிர்வை உருவாக்கியது. அப்போதுதான் கனடாவில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்கவும் எண்ணமும் தோற்றம்பெற்றது.

இன்று கனடா ஒரு நினைவுத் தூபியை அமைத்து இந்த உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டைப் புரிந்துள்ளது. இதன் வழியாக உலகின் நீதி முகமாக கனடா இருக்கின்றது. ஈழத் தமிழ் மக்களுடன் கனடா துணையிருப்பது மிக முக்கியமான பணி. தமிழர்களின் நினைவுரிமையை கனடா அங்கீகரித்தமைபோன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்… என்றும் கூறியுள்ளார்.

Previous Post

அம்பாறையில் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

Next Post
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures