Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

April 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழ் தரப்பினர் இந்தியாவை நாடுவதற்கு அரசாங்கமே காரணம் |  ஹிரிணி அமரசூரிய

நாட்டில் வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya)  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(09) வாய் மூல விடை க்கான வினாக்கள் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் (Amila Prasad) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், ”கடந்த அரசாங்கம் பாடசாலை அதிபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்திருந்தது. எந்த ஒரு முறைமையையும் பின்பற்றாமல் பதில் அதிபர்களை நியமித்திருந்தது.

நேர்முக பரீட்சை

அதனால் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த விடயத்தில் தேவையற்ற பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உரிய முறையை பின்பற்றி தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க அதிபர்களாக பதவி வகிக்க தகுதியுள்ளவர்களுக்கு அவர்களது கல்வித் தகைமைக்கு அமைய நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை | Pm Harini Steps To Fill School Principal Vacancies

அதற்கிணங்க வெற்றிடம் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு என வேறு வேறு நடைமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே விதமான முறைமையையே பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

ரிட்ஸ்பறி தொடர் ஓட்டத் திருவிழாவின் முதல் நாளன்று புனித ஆசீர்வாதப்பர், வத்தளை லைசியம் வெற்றி

Next Post

எலோன் மஸ்க்கிற்கு ரணில் ஒரே ஒரு அழைப்பு விடுத்தால்…ராஜித கூறிய அந்த விடயம்!

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

எலோன் மஸ்க்கிற்கு ரணில் ஒரே ஒரு அழைப்பு விடுத்தால்...ராஜித கூறிய அந்த விடயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures