Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

2 K லவ் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

February 16, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
2 K லவ் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : சிட்டி லைட் பிக்சர்ஸ்

நடிகர்கள் : ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.

இயக்கம் : சுசீந்திரன்

மதிப்பீடு : 2.5 / 5

முன்னணி நட்சத்திர இயக்குநரும்,  நடிகருமான சுசீந்திரன் வணிக ரீதியாக வெற்றி பெரும் படைப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘2 லவ் ஸ்டோரி’. இது அசலாகவே இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். 

கார்த்திக் ( ஜெகவீர் )மற்றும் மோனிஷா ( மீனாட்சி கோவிந்தராஜன் ) ஆகிய இருவருக்கும் பால்ய பிராயத்திவிருந்தே நட்பு ஏற்படுகிறது. பாடசாலையில் தொடரும் இவ்விருவர்களின் நட்பு கல்லூரியில் படிக்கும் போதும், அதன் பிறகு இருவரும் இணைந்து தொழில் செய்யும் போதும் நீடிக்கிறது. இந்த இருவருக்கும் இடையேயான எதிர் பாலின நட்பு இவர்களுடன் பழகுபவர்களுக்கு காதலாகவும்,  காதலர்களாகவும் தோன்றுகிறது. இந்த தருணத்தில் கார்த்திக்கு பவித்ரா எனும் பெண் மீது காதல் உண்டாகிறது. இருவரும் காதலிக்கும் போது பவித்ரா கார்த்திக் – மோனிஷா இடையே உள்ள நட்பு மீது சந்தேகம் கொள்கிறார். இதனை கார்த்திக் உணர்ந்து விளக்கம் அளிக்கிறார். தன் காதலரை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வால் பவித்ரா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனதளவில் சோர்வடைந்த கார்த்திக்கை மோனிஷா உற்சாகப்படுத்தி மீண்டும் சந்தோஷமான சூழலுக்கு அழைத்து வருகிறார். இந்த தருணத்தில் கார்த்திக் – மோனிஷா இருவருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பங்களும், அதற்கான தீர்வுகளும் தான் இப்படத்தின் கதை.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான நட்பு குறித்து உரக்க பேசும் இந்த படத்தில் இயக்குநராக சுசீந்திரனின் பங்களிப்பு குறைவு தான். வழக்கமான கதை என்றாலும் காட்சிகளில் புதுமையோ,  சுவராசியமான திருப்பமோ இல்லையென்றாலும் ஒளிப்பதிவாளர்+ இசையமைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து ரசிகர்களை காப்பாற்றுகிறார்கள்.

சுசீந்திரன் படத்தில் இடம்பெறும் வலிமையான உரையாடல்களும் மிஸ்ஸிங்.

பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ் , சிங்கம் புலி கூட்டணி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

அறிமுக நடிகர் ஜெகவீர் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவரது திரைத்தோற்றம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. பொருத்தமான கதையையும், திறமையான இயக்குநரையும் கவனமாக தெரிவு செய்தால்.. தமிழ் திரையுலகில் நிரந்தரமாக இடம் பிடிக்கலாம்.  ஏனைய நடிகர்கள், நடிகைகள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

2 K லவ் ஸ்டோரி –  ‘கிரிஞ்ச்’சான ஸ்டோரி

Previous Post

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு

Next Post

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்

Next Post
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் பணத்தை இலக்குவைத்த ராஜபக்சர்கள்! பொன்சேகா வெளிப்படை

June 12, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் அப்டேட்

June 12, 2026
நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures