Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘

January 23, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர  நடிகரும், தனித்துவமான நடிப்பின் மூலம் சர்வதேச திரை ஆர்வலர்களின் விருப்பத்திற்குரியவருமான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குநரான எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன், பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், பவெல் நவகீதன், ரமேஷ் இந்திரா, பாலாஜி  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட  தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரத்யேக காணொளி , கிளர்வோட்டம் , முதல் பாடல் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. 

அத்துடன் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலையும் தூண்டியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீயான் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான் ‘விமர்சன ரீதியாக பாரிய வரவேற்பை பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.  இதனால் வணிக ரீதியான வெற்றியை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என ரசிகர்களும், திரையுலகினரும் உறுதியாக அவதானிக்கிறார்கள்.

Previous Post

சட்டத்தரணி நடராஜர் காண்டீபனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

Next Post

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!

Next Post
யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

அனைத்து குற்றங்களிலுமிருந்து விடுபட்ட அனோஜன் சிவராசா: ஜனாதிபதியை சந்தித்த குடும்பத்தினர்

November 13, 2026
விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

November 13, 2026
பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

November 12, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

November 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures