Friday, July 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | தீபச்செல்வன்

January 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | தீபச்செல்வன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போது இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தெரிவித்திருந்தார். 

அதேபோல கடந்த 2023ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தின் போது “நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு நிதி ஒதுக்கவில்லை..” என்ற விடயத்தை முதன்மைப்படுத்திப் பேசிய வேளையிலும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை,போத்தல ஜயந்த தாக்குதல், கீத் நொயார் கடத்தல், ஊடகவியலாளர் நாமல் தாக்குதல்,பிரகீத் எக்னெலிகொட கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணைகள், அந்த விசாரணைகள் இடை நிறுத்தப்பட்ட விதம் குறித்தும் தனது கரிசனையை வெளிப்படுத்தினார்.

படுகொலைகள் குறித்து விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க கடந்த நவம்பர் மாதம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய வேளை குறிப்பிட்டிருந்தமையையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இன்று லசந்தவின் நினைவுநாள். இன்றைய நாளில் லசந்தவின் பயணம் தொடர்பிலும் அவர் மீதான படுகொலையின் வழி தந்திருக்கும் வாக்குமூலத்தையும் நினைவு கொள்ள வேண்டிய நாள். 

சிறிலங்கா அரசின் முகம் எந்தளவு இரக்கமற்றது என்பதற்கும் பேரினவாதக் கொள்கைக்கு பிரச்சினை ஏற்பட்டால் கருணைக் கொலையைப் போல சொந்த இனத்தையே கொலை செய்யக்கூடிய மனித சமூகத்திற்கும் இனத்திற்கும் விரோதமான போக்கையும் கொண்டது என்பதற்கு லசந்த ஒரு சாட்சியுமாக தன்னைக் கொடுத்திருக்கிறார்.    

லசந்த விக்கிரமதுங்க மனித உரிமைகளுக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த அற்புதமான ஊடகவிலாளன். அவர் தமிழ் மக்களுக்கு எதிரான போர் தொடர்பில் மிகவும் அழுத்தமான கருத்துக்களை எழுதி வந்தார்.

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | Anura Fulfill His Promise Get Justice For Lasantha

அத்துடன் 2009ஆம் ஆண்டு கால கட்டத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் சிறிலங்கா அரசின் ஆட்டங்களையும் அநியாயங்களையும் சண்டே லீடர் பத்திரிகையில் எழுதி வந்தார். 

அவரது ஆசிரியர் தலையங்கள் காயப்பட்ட இனத்தின் வலிகளையும் குமுறல்களையும் சிங்களத் தோழமைக் குரலாக அணைத்தது. அதுவே மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரச்சினையானது.

லசந்தவின் தந்தை ஹரிஸ் விக்கிரமதுங்க, சிறிலங்காவின் பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் உள்ளுராட்சி உறுப்பினராக இருந்தார்.

லசந்த சிறுவயதிலேயே ஊடக ஆர்வம் கொண்டிருந்தார். சன் பத்திரிகையில் செய்தியாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த லசந்த, 1982இல் தி ஜலண்ட் பத்திரிகையில் இணைந்தார். 

1989இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத நிலையில் சில காலம் அவுஸ்ரேலியாவிலும் வாழ்ந்திருந்தார். அதன் பிறகு, இலங்கை திரும்பிய நிலையில் 1994இல் சண்டே லீடர் பத்திரிகையை ஆரம்பித்தார்.

லசந்தவின் ஊடகப் பயணம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அவர்மீத பல தடவைகள் தாக்குதல் முயற்சிகளும் கொலை எத்தனிப்புக்களும் நடந்திருக்கின்றன. 1995இல் அவர் பயணித்த வாகத்தில் வைத்து தாக்கப்பட்டார்.

லசந்தவின் படுகொலை

1998இல் அவர் வசித்த வீட்டின்மீது கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது. 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் சண்டே லீடர் பத்திகை அலுவலகம் தீ வைத்து அழிக்கப்படும் காரியங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் மிகக் கோரமான இனவழிப்பு யுத்தம் நடந்திருந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கொழும்பு கல்கிசையில் உள்ள லீடர் பப்ளிக்கேசனுக்கு செல்கின்ற போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. 

வார்த்தைகளாலும் கருத்துக்களாலும் அனைத்தின மக்களின் நீதிக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்த லசந்த விக்கிரமதுங்க மீது குண்டுகள் பாய்ந்தன. 

அவர் தலையிலும் மார்பிலும் குண்டுகள் தைத்த நிலையில் களுபோவளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சைகள் இடம்பெற்ற போதும் பலனின்றி லசந்த விக்கிரமதுங்க உயிரிழந்தார். 

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | Anura Fulfill His Promise Get Justice For Lasantha

லசந்தவின் படுகொலையை சிறிலங்கா தலைநகர் கொழும்பை உலுக்கியது. மனித உரிமை செயற்பட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அவர் படுகொலைக்கு நிதி கோரிப் போராடினர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் மீதான கோரக் கொலைகளின் கொடூரத்தை லசந்தவின் படுகொலை உலகிற்கு உணர்த்தியது. பன்னாட்டு தூதரகங்கள் இக் கொலையை கண்டித்தன. லசந்தவின் கொலை தொடர்பில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஒருவர் வாகன திருத்துநர். மற்றையவர் இராணுவப் புலனாய்வாளர். வாகனத் திருத்துநர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இராணுவப் புலனாய்வாளர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 2013இல் கச்கிசை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். லசந்தவுக்கான நீதி தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்த குற்றத்தில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கொலைக் குற்றவாளிகள் என பவரலாக குற்றம் சுமத்தப்பட்டனர். 

குறிப்பாக லசந்தவை படுகொலை செய்தது ராஜபக்சவினர் என்றே அன்றைய எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி லசந்தவின் படுகொலை நிகழ்வு குறித்த கருத்துக்களை அரசுக்கு எதிரான கருத்தீடாகவும் ஆயுதமாகவும் கையாண்டது. 

லசந்தவுக்கான நீதி 

ராஜபக்சவினரை அதிகாரத்தில் இருந்து நீக்கவும் தாம் அதிகாரத்தை கைப்பற்றவும் லசந்த உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்போம் என்றும் குரல் எழுப்பி ரணில் தரப்பால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

லசந்த இறப்பதற்கு முன்பு எழுதிய ஆசிரியர் தலையங்கம், அவர் இறந்த பின்னர் வெளியானது. அதில் முக்கிய விடயமாக “என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, காவல்துறையினரை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். 

கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று.

ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். 

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | Anura Fulfill His Promise Get Justice For Lasantha

உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது! என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது.

இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.

தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்சர்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது…” என்று எழுதியிருந்தார் லசந்த விக்கிரமதுங்க.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு தமிழ் மண்ணில் இசைப்பிரியா என்ற ஊடகவியலாளர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிதைத்துக் கொல்லப்பட்டார். 

சிங்களப் பேரினவாத வெறி சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானது. லசந்தவின் நீதி சிங்கள தேசத்திற்கானது.

இசைப்பிரியாவின் நீதி தமிழர் தேசத்திற்கானது. தேர்தல் காலங்களில் ரணிலும் அனுராவும் லசந்தவுக்கு நீதி பெற்றக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ரணில் லசந்தவைப் படுகொலை செய்தவர்களையும் பாதுகாத்தார். 

அநுரவும் அதைத்தான் செய்வாரா? ஈழ இறுதிப் போர் நடந்த காலத்கட்டமான 2009இல் சனவரி 8ஆம் திகதி லசந்த கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. 

இறுதிப்போர்க்காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகப் போராளியான இசைப்பிரியாவுக்கும் அதற்கு முன்பாக கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் லசந்தவுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இருவருக்குமான நீதியைப் பெற்றுத்தர பன்னாட்டு விசாரணைத்தான் தேவையா?   

தீபச்செல்வன்

Previous Post

பேனாமுனைப் போராளி தீபச்செல்வனின் சயனைட் | கேசுதன்

Next Post

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் – சிறிநேசன் எம்.பி 

Next Post
கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் – சிறிநேசன் எம்.பி 

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் - சிறிநேசன் எம்.பி 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

July 18, 2025
சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

July 18, 2025
மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025

Recent News

மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

July 18, 2025
சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

சாதனை படைக்கும் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ பட முன்னோட்டம்

July 18, 2025
மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures