Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு கிழக்கை பிரித்தது ஜேவிபிதான் | கருணா

October 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு கிழக்கை பிரித்தது ஜேவிபிதான் | கருணா

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.  

அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களிலும் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களமிறங்கி இருந்தேன்.  

இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள். 

எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும். அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். 

மட்டக்களப்பில் இருந்து உருவான கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்.  

அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள், யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும். அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது.  

அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போயுள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும். 

வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக வேண்டி நான் இந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.  

அதனை ஏற்படுத்துவதற்கு என்னால் முடியும். அதற்காகவேதான் நான் வந்திருக்கின்றேன். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. பணத்துக்கும் இலஞ்சத்துக்கும் இடம்பெற்ற கூடாது. இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வைத்துள்ளேன்.  

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வரப் போகின்றார் என்ற போது அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாத்திரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் எண்ணில் சுமத்த முடியாது. ஒரு மதுபான கடைகுரிய அனுமதிப்பத்திரம் என்னிடம் இல்லை.   

மணல் ஏற்றுவதற்கு உரிய அனுமதிப்பத்திரமில்லை. நான் இருந்தபடியே தான் இப்போதும் இருக்கிறேன். களவு செய்தவர்கள் அனைவரும் பயத்திலே திரிகின்றார்கள, பழைய அமைச்சர்கள் கொழும்பிலே ஒளித்துவிட்டார்கள், நானும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்குத்தான் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தேன். 

ஊழலை நிறுத்த வேண்டும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும், என்பதற்காகவேதான் நான் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில் ஜனாதிபதியாக சிங்கள நபர் ஒருவர்தான் இந்த நாட்டிலே வரமுடியும் தமிழர் ஒருவரோ இஸ்லாமியர் ஒருவரோ வரமுடியாது.  

ஆனால் பொதுத்தேர்தல் என்பது வேறாகும் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதிலே ஜேவிபி எனும் கட்சிக்குப் பின்னால் யாரும் போகக்கூடாது. அவர்கள் இனத் துவேஷம் பிடித்த ஒரு கட்சியாகும் தமிழர்களுக்கு முதலாவது துரோகம் செய்த கட்சி ஜே.வி.பி. ஆகும்.   

நீதிமன்றம் சென்று வடகிழக்கை சட்ட ரீதியாக அவர்கள் பிரித்தார்கள். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, மஹிந்த ராஜபக்ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ பிரிக்கவில்லை. பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். இதனை நாம் மறந்துவிட முடியாது.   

சிலர் திசைகாட்டி திசைகாட்டி என வருவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே திசைகாட்டி சின்னத்திலேயே மூன்று தீவிரமான முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும், ஏனையவர்கள் மலையகத்தைச்  சேர்ந்தவர்களையும் மட்டக்களப்பிலே களமிறக்கியுள்ளார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் சங்கு ஒரு பக்கம், மற்றவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லது ஒரு முடிவு எடுத்தார்கள். நானும் அதோடு சத்தமிடாமல் இருந்தேன்.  அவர் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அவர்கள் வந்தார்கள். 

ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டார்கள். ரணிலிடம் 60 கோடியை சாணக்கியன் வாங்கிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு வேலை செய்துள்ளார். 

சாணக்கியனும் சுமந்திரனும் எப்போது கட்சிக்குள் வந்தார்களோ அப்போது அந்த கட்சி அழிந்து போய்விட்டது. இதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேசியம் தேசியம் என கதைத்து  உசுப்பேத்துகின்றார்கள்.  

இம்முறை தேசியம் கதைப்பதற்கு வந்தால் கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்துவிட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும்.  

இதனை நான் கூறவில்லை. ஜனா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார். 60 கோடியை  சாணக்கியன் பெற்றதாக சாணக்கியன் கூறுகின்றார். ஜனாவை பார்த்து நீ அதிக அளவு சொத்துக்கள் குவித்து வைத்திருக்கிறாய் அந்த சொத்து எங்கிருந்து வந்தது உமக்கு என கேட்கின்றார்.  

இன்னும் ஒருவருக்கு 588 கோடி ரூபாய்க்கு உரிய விசாரணை வரவிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து அனைத்து இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். அதனை மக்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இவ்வாறு கொள்ளை அடித்திருந்தால் எவ்வாறு மக்களுக்கு அவர்கள் சேவை செய்வது இந்த நிலையில் மக்கள் நன்றாக முடிவெடுக்க வேண்டும். 

எனது கண்ணுக்கு முன்னரே பல போராளிகள் மடிந்தார்கள். அதனை நான் மறக்கவில்லை. பல போராளிகள் அங்கவீனமாக இருக்கின்றார்கள். அதை நீ நான் மறக்கவில்லை. பல தாய்மார்கள் தற்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.   

இதற்கு எல்லாம் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக வேண்டி அனைத்து போராளிகளும் அணி திருளுங்கள். ஒருவொருவரும், மாற்றுத் திசைகளுக்கு செல்ல வேண்டாம். எனக்கு தான் போராளிகளின் அருமை தெரியும். யாருக்கும் அது பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை.  

மாவீரர் நாள் அனுஷ்டிப்பது என்றால் அதனை நாங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஒளிந்திருந்துவிட்டு வந்தவர்களுக்கு எந்த உணர்வுமில்லை. இனிமேல் அதற்கு அனுமதிக்க முடியாது.  

எனவே தமிழர்களின் இருப்பை காப்பாற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துவிட வேண்டும். படித்தவர்கள் எதனையும் சாதிப்பதில்லை. இலங்கையிலே முதலாவது படிப்பு படித்தவர் தான் மதுபான கடை நடத்துகின்றார். நான் மதுபான கடைகளுக்குரிய அனுமதிப்பத்திரம் பெறுவது என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கலாம். அதெல்லாம் வேண்டாத விடயம். 

தமிழரசு கட்சியில் வைத்தியர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர்கள் போட்டியிடவில்லை.  

அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையை பற்றி தெரியாது. நான் 22 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனது சொந்த அண்ணனை கூட நான் இழந்திருக்கின்றேன். அனைவருக்கும் இழப்புக்கள் உள்ளன. தேசியப் பட்டியலில்தான் நான் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். 

அதனூடாக அதிகளவு வேலைகளை மக்கள் மத்தியில் நான் செய்திருக்கின்றேன். இந்த முறை பாராளுமன்றத்திற்கு மக்களின் ஆணையுடன்தான் செல்ல வேண்டும். அவ்வாறெனில் தான் எதையும் வாதிட்டு பெற்றுக்கொள்ளலாம். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று எதிரே உள்ள உறுப்பினர்களை குற்றம் சுமத்துவதுதான் அவர்களுடைய வேலை. மாறாக இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையே யாரையும் குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் பேசவில்லை. 

கடந்த முறை அம்பாறையிலே போட்டியிட்டு 35000 வாக்குகளை அந்த மக்கள் எனக்கு அளித்திருந்தார்கள். மக்களுக்காக நாங்கள் உயிரையும் தருவதற்கு காத்திருக்கின்றோம். அது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை.  கூட்டமைப்புக்கும் சங்கு குழுவுக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும்.  

இலஞ்ச ஊழலை நிறுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தலா 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றாராம், இன்னும் ஒரு வேட்பாளர் மதுபானம் வழங்கியதாக பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு செய்த காசுகளை அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள். தேசப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் வளர்த்துவிட வேண்டும் என்றார். 

Previous Post

நுவரெலியாவில் முகப்புத்தக களியாட்டம் | போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைய வெளியிட அனுரவுக்கு உதய கம்மன்பில காலக்கெடு!

Next Post
நாட்டு மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் | உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைய வெளியிட அனுரவுக்கு உதய கம்மன்பில காலக்கெடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures