Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

September 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, “பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்” எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளைமீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்யப்படும்.

மக்களுக்கு இடையூறு

இந்த நிலையில், இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் | Municipal Council Did Not Take Any Action Jaffna

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கோரிக்கை

இதன் படி, சம்பவம் தொடர்பில் தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் | Municipal Council Did Not Take Any Action Jaffna

நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை பாரிய அச்சுறுத்தல் | ஜயந்த சமரவீர

Next Post
கொழும்பில் தமிழ் பாடசாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை பாரிய அச்சுறுத்தல் | ஜயந்த சமரவீர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures