Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரிவினைவாதிகளின் டொலருக்காகவே 13ஐ அமுல்படுத்துவதாக ரணில், சஜித், அனுர வடக்குக்கு வாக்குறுதி – உதய கம்மன்பில

September 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

தேர்தல் செலவினங்களுக்காக பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காகவே ரணில், சஜித், அனுர ஆகியோர் வடக்குக்குச் சென்று 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். வடக்கில் சாதிய ஒடுக்குமுறையால் இன்றும் ஒதுக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. 1971ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட சமூக குறைப்பாடுகளை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேசிய மூலோபாய கருத்திட்டம் வெளியீடு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1957.04.13ஆம் திகதி தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது தெற்கு சிங்களவர்களை காட்டிலும் வடக்கு தமிழர்களே பெருமளவில் மகிழ்ச்சியடைந்தார்கள். வடக்கில் வாழ்ந்த தமிழர்களில் ஒரு தரப்பினருக்கு கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்குவதற்கு  சிங்கள புத்தாண்டு தினத்தன்றே அனுமதி வழங்கப்பட்டது.

1957ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் 1957ஆம் ஆண்டு 21ஆம் இலக்க ‘சமூக குறைப்பாடுகளை தடுக்கும்’ சட்டத்தை சான்றுரைத்தார். அன்று கையில் காசு இருந்தும் ஹோட்டலுக்கு சென்று தோசை, வடை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த, அடிவாங்க நேரிடும் என்ற அச்சத்தில் தமது சாதியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த பேருந்துக்காக பல மணித்தியாலங்கள் காத்திருந்தவர்களுக்கும், பொது கிணற்றில் நீர் எடுப்பதற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு 1957ஆம் ஆண்டே உண்மையான சுதந்திரம் கிடைக்கப்பட்டது.

பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட குழந்தை பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பக்கவாத நோய்க்குள்ளாக்கப்படுகிறது. 1971ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாநாயக்கவின் அரசாங்கம் இந்த சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கொண்டு வந்து கீழ் சாதியினர் என்று கருதப்படும் சமூகத்தினர் கோயிலுக்குள் சென்று கடவுளை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிந்த தடையை நீக்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம் நீக்கப்படுகிறது.

வடக்கு மக்கள் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். ஒருசிலர் தமது விதி என்று எண்ணி தங்களை தேற்றிக்கொண்டார்கள். தெற்கு சிங்களவர்களுக்கு இது தெரியவில்லை. 1971ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எவரும் பேசவில்லை.

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினையை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று ‘சிங்களவர்களின் நெருக்கடியில் இருந்து விடுதலை பெற அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக’ குறிப்பிடுகிறார்கள்.

தேர்தல் செலவுகளுக்கு பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காக வடக்குக்கு சென்று இவர்கள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் வடக்கில் இன்றும் சாதிய வேற்றுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து இவர்கள் கவனம் செலுத்தவில்லை. சாதிய வேற்றுமையால் வடக்கில் இன்றும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக சமூக குறைப்பாடுகளை தடுக்கும்  சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம்.

பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்துவற்காக உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எமக்கு நல்லிணக்கம் அவசியமா? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டது. 

வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் வாழ்கிறார்கள், தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் வாழ்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்கள். இதனை காட்டிலும் நல்லிணக்கம் அவசியமா? உத்தேச  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்ததால் நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளம் ஓடும் நிலை ஏற்படும் என்றார்.

Previous Post

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

Next Post

தமிழ்பொதுவேட்பாளரால் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பு | பெரமுன 

Next Post
தமிழ்பொதுவேட்பாளரால் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பு | பெரமுன 

தமிழ்பொதுவேட்பாளரால் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பு | பெரமுன 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures