Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜய் நடிக்கும் ‘கோட்- GOAT’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

August 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

தமிழ் சினிமாவில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘கோட் – GOAT’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஸ்பார்க்..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட் – GOAT’ திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

சித்தார்த்த நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்- கல்பாத்தி எஸ். கணேஷ் – கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 5 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அவ கண்ணால பார்த்தா..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் கங்கை அமரன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி பாடகி விருஷா பாலு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

துள்ளலான தாள லயம் +மெல்லிசை பாடலுக்குரிய மெட்டு + இளைய தலைமுறையினரை கவரும் பாடல் வரிகள்+ டி ஏஜிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஜயின் தோற்றம் + யுவனின் வசீகரமான குரல் + ஆகிய கலவையுடன் உருவான இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

மேலும், இந்தப் படத்தில் வெளியான இரண்டு பாடல்களை விட இந்த பாடலில் யுவனின் மேஜிக் அற்புதமாக அமைந்திருப்பதால் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே இந்தப் பாடலில் விஜயின் இளமையான தோற்றம் குறித்து இணையத்தில் ரசிகர்கள் எதிர்மறையான பின்னூட்டங்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பதும், விஜயின் ரசிகர்கள் இதற்கு சரியான பதிலடியை பதிவிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் – விஜித ஹேரத்!

Next Post

ஜனாதிபதி தேர்தலில் வடிவேல் சுரேஸின் ஆதரவு யாருக்கு? 12ஆம் திகதி அறிவிப்பாம்

Next Post
அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும் | வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி தேர்தலில் வடிவேல் சுரேஸின் ஆதரவு யாருக்கு? 12ஆம் திகதி அறிவிப்பாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures