Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” : புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தல்!

July 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
“தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” : புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தல்!

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” என அழைக்கப்படும் என உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளனர். 

தமிழ்த் தேசியக் கட்சிகள் – தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ,யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாவது, தமிழ்த் தேசியக் கட்சிகள் – தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள்.

அடிப்படையிலும் உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள். அதனடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் நீண்ட வரலாற்றையும் மிகச் செழிப்பான பண்பாட்டையும் கொண்ட தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கைத்தீவில் இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தீவிரவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசிய இனமாக இருப்பதும், கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தை வாழ்விடமாகக் கொண்டிருப்பதும் அவர்களது பிரதான அரசியல் பலமாகும் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் முதலில் பிராந்தியமயப்பட்டது. பின்னர் அனைத்துலகமயப்பட்டது.

நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் காட்டி வந்திருக்கின்ற கரிசனைகளைச் சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் பொருட்படுத்தவும் இல்லை; ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவுமில்லை.

அதேநேரத்தில் முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களிற்கு சமஉரிமையை வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வுகளைக்கூட இதுவரை காலமும் முன்னெடுக்கவில்லை.

இனப்படுகொலைக்கு எதிரான நீதியுமின்றி, அரசியல் தீரவுமின்றி, ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவமும் இன்றி பாரபட்சங்களும், அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும், ஆக்கிரமிப்புக்களும். அழிப்புகளும், பிரித்தாளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசியல், பொருளாதார, இராணுவச் சூழலில் தந்திரங்களும் தமிழ் மக்களின் தேசிய இருப்பு கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

இவ்வாறான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இதுகாலவரையிலான அனுபவங்களின் அடிப்படையிலும், சிறீலங்காவின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் அவசியமும் எழுந்திருக்கின்றது. 

இந்த யதார்த்தத்தின் பின்னணியில், தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு, எதிர்வரும் சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று. தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணக்கம் கண்டுள்ளன. 

அத்துடன், இதனைச் செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில், பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவைக் கொண்டுள்ளன.

இதன்பிரகாரம் இவ்வுடன்படிக்கையின் சம தரப்புக்கள் என்னும் வகையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவை பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொள்கின்றன.

1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” என அழைக்கப்படும்.

2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை. சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள். பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.

4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள். தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.

5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.

6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும். ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது.

8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.

9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர் என 09 புரிந்துணர்வுகள் அடங்கிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை வரும் ஐஎம்எப் பிரதிநிதிகள் குழு!

Next Post

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

Next Post
செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்-ஜீவன்

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures