Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை வெற்றிகொண்ட இந்தியா ஆசிய கிண்ணத்தில் விளையாடத் தகுதி

July 16, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இலங்கையை வெற்றிகொண்ட இந்தியா ஆசிய கிண்ணத்தில் விளையாடத் தகுதி

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சனிக்கிழமை (13) இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தெற்காசிய கூடைப்பதாட்ட சங்க (SABA) சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 87 – 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டி சம்பியனான இந்தியா, FIBA 18 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.

முதல் இரண்டு ஆட்டநேர பகுதிகளில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போட்டியில் இடைவேளையின்போது இந்தியாவும் இலங்கையும் தலா 43 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தன.

எனினும் இடைவேளையின் பின்னர் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை, புள்ளிகள் பெறும் பல வாய்ப்புகளை கோட்டை விட்டு தோல்வியைத்  தழுவியது.

போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் இரண்டு அணியினரும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்டதுடன் அப் பகுதியை 3  புள்ளிகள் வித்தியாசத்தில் 19 – 16 என இந்தியா தனதாக்கிக்கொண்டது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் திறமையாக விளையாடிய இலங்கை, அப் பகுதியை 27 – 24 என தனதாக்கி இடைவேளையின் போது புள்ளிகள் நிலையை 43 – 43 என சமப்படுத்தியது.

ஆனால், இடைவேளையின் பின்னர் மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை வீரர்கள் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததுடன் கிட்டத்தட்ட 10 சந்தர்ப்பங்களில் புள்ளிகள் பெறும் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட இந்திய அணி அப் பகுதியை 20 – 7 என தனதாக்கி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் (63 – 50) முன்னிலை அடைந்தது.

கடைசி ஆட்டநேர பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அப் பகுதியையும் 24 – 12 என்ற புள்ளிகள் தனதாக்கி 87 – 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

இந்தியா சார்பாக எம். இஷான் 22 புள்ளிகளையும் எம். தனசேகர் 19 புள்ளிகளையும் அணித் தலைவர் லாவிஷ் 17 புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை சார்பாக டெரன் பேர்னார்ட் 13 புள்ளிகளையும் எவீன் சேனாரத்ன 13 புள்ளிகளையும் அணித் தலைவர் மெத்திக்க ஜயசிங்க 10 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்களாதேஷை 59 – 57 (5 – 12, 23 – 10, 13 – 22, 18 –  13)  என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாலைதீவுகள் வெற்றிபெற்றது.

Previous Post

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிணை | முகநூல் நேரலைக்கும் தடை

Next Post

ஜனாதிபதியை சந்தித்தார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம்

Next Post
ஜனாதிபதியை சந்தித்தார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதியை சந்தித்தார் யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா, சந்திமால் காயம் காரணமாக ஓய்வு !

August 18, 2026
தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை

August 18, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை!

August 18, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வன்னியில் 17 சுதேச மருத்துவர்கள் பதிலீடின்றி இடமாற்றம்: ரவிகரன் எம்.பி.

August 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures