2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவித்துள்ளது.
இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
ஜூலை 5 வரை சமர்ப்பிக்க முடியும்
இதேவேளை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.