Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசால் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது விஜயதாசவுக்கு தெரியாதா? 

May 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நம்பிக்கையை கட்டியெழுப்பவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு | விஜயதாச

ஜே.வி.பி இரண்டு முறை ஆயுதம் ஏந்தி போராடியதன் விளைவாக 1971 ஆம் ஆண்டில் 12,000 பேரும், 1988-1989 ஆண்டுகளில் 77,000 பேரும் உயிரிழந்ததாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

30 வருடகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த நாடு சிறியதாக இருந்தாலும் பலபடுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட  நல்லிணக்கக்குழுவிற்கான காரியாலயமொன்றை திறந்துவைக்கும் முகமாக மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில்  நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அமைச்சர்  தெரிவித்தார். 

இவ்வாறான அனர்த்தங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுக்களுக்கு ஆதரவு கிடைக்கும் எனவும் இதன் மூலம் கிராமத்திற்கு கிராம அரச அதிகாரம் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய  விஜயதாச ராஜபக்ஷ,

இதுவரையில் செயற்பட்டு வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் முதல் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டரீதியான அமைப்பாக மாற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த நிறுவனத்தினூடாக கிராமத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிராமம் வலுவூட்டுவதாகவும், 14016 கிராம சேவைபிரிவுகளிலும் 11000 இற்கும் மேற்பட்ட கிராம சேவைபிரிவுகளில்  ஏற்கனவே  நல்லிணக்கக் குழுக்களை நிறுவியுள்ள தாகவும் அவர் கூறினார்.

அண்மைக் காலத்தில் நாடு அரசியல் ரீதியாக  திவாலான நிலைக்கு தள்ளப்பட்டும் மேலும்  நாடடில் ஏற்பட்டுள்ள  வங்குரோத்து நிலையிலும், மறுபுறம் சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலும் சீரழிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விட, இந்த நிலைமை ஏன்? ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அது மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாம் சுதந்திரம் பெற்ற போது இருந்த தேசிய மற்றும் மத உறவுகளை பாதுகாக்க முடியாமல் போனதும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி கடுமையாக உடைக்கப்பட்டதுமே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

இனம்,மதம் ,குலம் ஆகியவற்றின் அடிப்படையில்  மக்கள் பிரிந்தது ஒருபக்கம் இருக்க, மறுபுறம்   உடரட்ட பகத்தரட்ட  என பிரிவினைகள் வரையறுக்கப்படாவிட்டாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைக் பல பிரிவினர்களாகப் பிரித்து  இந்தப் பிரிவினைகளை தமது பிழைப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனரதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு கிராமம் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுவதுடன், கிராமத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் ஐக்கியம் நிலைநாட்டிடப்படுவதுடன்  

கிராமத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களை ஒன்றிணைத்து கிராமத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கி புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தேசிய மட்டத்திற்கு இதனை கொண்டு வர அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்  வலியுறுத்தினார்.

மேலும் இந்த விசேட சட் ட யாப்பு , நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாகவும், மேலும்  கிராமத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை இனிமேல் கிராம மக்களே தீர்மானிப்பார்களே தவிர அரசியல்வாதிகளோ அவர்களின் ஆதரவாளர்களோ அல்ல எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, சர்வமத பெரியார்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை புலிகளால் 77ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இவர் கூறுவது ஆச்சரியமான பொய் என்றும் அரசால்தபன் பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

Previous Post

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

Next Post

பட்டதாரிகள் அரசியல்வாதிகளுக்குப் பின் செல்லக்கூடாது | சஜித்

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

பட்டதாரிகள் அரசியல்வாதிகளுக்குப் பின் செல்லக்கூடாது | சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures