Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பகலறியான்’ படத்தில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

May 18, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் வெற்றி நடிக்கும் ‘பகலறியான்’ படத்தில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பகலறியான்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு மற்றும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசுகையில், 

” கதாசிரியர் கிஷோர் ‘பகலறியான்’ படத்தின் கதையை எம்மிடம் விவரித்தார். ஒரே இரவில் நடைபெறும் கதை. கதையும் எம்முடைய கதாபாத்திரமும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதியவர்கள். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் சற்று பதட்டமாக இருந்தது.

 ஆனால் ஒளிப்பதிவாளர் இரவு நேரத்தில் காரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நேரில் பார்த்து வியந்தேன்.‌ அதன் பிறகு இந்த குழுவினர் மீது முழு நம்பிக்கையும் ஏற்பட்டது. இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் வகையிலான படம் என்றாலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். கதாநாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா  நன்றாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு இடையே தடைகள் வந்தாலும் தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான முருகன் அனைத்தையும் எதிர் கொண்டு படத்தை நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தருக்கும் எம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

குற்றவியல் பின்னணியிலான கதைக்களத்தில் தயாராகி இருக்கும் ‘பகலறியான்’ திரைப்படத்தில் வெற்றி அக்ஷயா, முருகன், ராம் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ அபிலாஷ் பி எம் வை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் சரோ  இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை ரிஷிகேஷ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லதா முருகன் தயாரித்திருக்கிறார்.

படத்தின் முன்னோட்டத்தில் இரவு நேர காட்சிகள் அதிகம் இருப்பதும்.. போதை வஸ்துகள் கடத்தல் தொடர்பான காட்சிகளும்.. குற்றவியல் பின்னணி கொண்ட கதையின் நாயகனை கதாநாயகி காதலிக்கும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்.. ‘பகலறியான்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

Previous Post

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “பெதி ருகா” களுத்துறையில் கைது

Next Post

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

Next Post
நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது - ஜூலிசங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures