Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

May 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டும் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஐவருக்கு உத்தரவு வழங்கபட்டுள்ளது.

குறித்த உத்தரவானது, கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை  காவல் நிலையப் பொறுப்பதிகாரி  காவல் துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் குறித்த நபர்களுக்கு தடையுத்தரவு பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடை உத்தரவு

இதற்கமைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விநாயகம் விமலநாதன் ஆகிய ஐவருக்கே இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு | Mullivaikkal Kanji Court Injunction Against Five

மேலும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரிய நீலாவணை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இழைக்கப்பட்ட அநீதி

சம்பவமானது காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு  காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு | Mullivaikkal Kanji Court Injunction Against Five

கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

பின்னர்  காவல்துறையினரின் நடவடிக்கையை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்டஉறவுகளின் சங்கத தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முறைப்படுகளைப் பதிவு செய்திருந்தனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
Gallery
Gallery
Gallery
Previous Post

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி 

Next Post

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற சதிதிட்டம்: பின்னணியில் ராஜபக்ச குடும்பம்

Next Post
“காய்த்த மரமே கல்லடி படும்”  | விடுதலையான பசில் நியாயம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற சதிதிட்டம்: பின்னணியில் ராஜபக்ச குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures