Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

February 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

இலங்கையின் சுதந்திரதினத்தன்று தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனின்மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேசதமிழீழ இராஜதந்திரகட்டமைப்பு தமிழ்இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.

இது குறித்த இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது

“ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில்இ சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிமை உள்ளது என்பதை சுயநிர்ணய உரிமை மக்களின் சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது “

இவ்வரையறைக்குள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் அன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

உலகெங்கிலும் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரிமைக்குரல் எழுப்பவுள்ள இப் பேரணியானது இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு உயர் முன்பாக ஆரம்பித்து நடைபவனியாக செல்லவுள்ளது.

இலங்கை உயர் ஆணைய இல்லத்தின் முன்றலில் இருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகி ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் நிர்வாகத் தலைமையகம் மற்றும் அரச வதிவிடமாக விளங்கும் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கிச்சென்று பின் அங்கிருந்து பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையும்.

பேரணியின் நிறைவில் பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ் பிரித்தானியப் பிரதம மந்திரி மதிப்புக்குரிய ரிஷி சுனக் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு உள்ள பொறுப்பின் ஆழத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்துஇந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.

Previous Post

நடிகர் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

Next Post

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் | புதிய கூட்டணிகள் பற்றி மனோ

Next Post
தேரர்களின் நடத்தை | இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் | மனோ கணேசன் எம்பி

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் | புதிய கூட்டணிகள் பற்றி மனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures