Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

January 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வைத்தியரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

திருகோணமலை – புல்மோட்டை தள வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரிக்கு எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின்  வருடாந்த இடமாற்றம் எந்த பதிலீடுகளும் இல்லாமல் இடம்பெற்றது. இந்த இடமாற்றத்தை, நிறுத்தக்கோரி புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பல அமைப்புக்களும், பொதுமக்களும் இணைந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை  சந்தித்து இதுதொடர்பான விடயங்கள் முன்வைத்தனர்.

குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமாகிய ஏ.முபாறக் தலைமையில், புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனம், புல்மோட்டை அல் – மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட அப்பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

எங்களது வைத்தியாலைக்கு 7 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுகிறது. ஆனால், 3 வைத்தியர்கள் மாந்திரமே கடமை புரிந்து வருகின்றனர். இந்நிலைமையில், வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின் வருடாந்த இடமாற்றத்திலும், அவருக்குப் பதிலாக எந்த பதிலீடுகளும் இல்லாமல் இடம்பெற்றுள்ளது. அவரும் சென்றால் 2 வைத்தியர்கள் மாத்திரமே இருப்பார்கள். இது எங்களுக்கும் எங்கள் பிரதேசத்தில் வாழ்கின்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் செய்யும் பாரிய அநீதியாகும் என்றும் இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீன் கடந்த COVID-19 காலப்பகுதியில் வைத்தியர்கள் ஒருவருமே இல்லாத சந்தர்ப்பத்திலும், தன்னுயிரையும் பாராது தனியாளாக நின்று, எந்த விடுமுறையும் பெற்றுக்கொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த வைத்தியர் என்ற விடயத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உரிய வைத்தியரின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டார்.

புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.அஸீஸ், அதன் செயலாளர் ஏ.எல்.அப்துல் சலாம் மற்றும் புல்மோட்டை அல் – மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் கே.ரீ.மசூர்டீன், அதன் செயலாளர் ஐ.எம்.வசீம், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமாசபை கிளையின் தலைவர் எம்ஏ.சி.சலாம் மௌலவி புல்மோட்டை விவாகப் பதிவாளர் ஏ.எல்.ஏ.கலீல்,  புல்மோட்டை தக்வா பள்ளிவாசல் தலைவர் மஹ்றூப் அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் சேவைகளைப் பாராட்டி உரிய அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

Next Post

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

Next Post
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures