கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் நிர்மாணங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் பொறியியலாளர் ஆர் டி. பி. ரணவக்க தெரிவிக்கையில், அண்மையில் பெய்த கடும் மழையினால் கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறான வீடுகளில் வசிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இது தொடர்பில் கலந்துரையாடி இவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்குளி, ஜெதவனய, போன்ற பல இடங்களில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், மிக விரைவாக அகற்றப்பட வேண்டிய ஒரு பகுதி இனங்காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.