பதுளை தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் கடிதம் 2024 ஜனவரி 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.