மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27 ஆம் திகதி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரு கார்களில் வந்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு இளைஞர்களை தாக்கி தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விடயம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.