Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வட மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக முறைப்பாடளிக்க தொலைபேசி சேவை

December 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்தார்.

0761799901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டும் வட்ஸ் அப் மூலமாகவும் முறையிட முடியும். முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இந்த வருடத்தில் சுமார் 3,100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலப் பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் யாழ்.நகரத்தைச் சேர்ந்தவர் மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவராவார்.

யாழ்ப்பாணம், நல்லூர்,கோப்பாய், சண்டிலிப்பாய், பருத்தித்துறை,கரவெட்டி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் எற்பட்டால் உடனடியாக தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுவது சால சிறந்தது என்றார்.

Previous Post

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்

Next Post

விசேடத்துவமான பயிற்சியளிப்பினூடாக வட பிராந்தியத்தின் கிரிக்கட்டுக்கு வலுவூட்டல்

Next Post
விசேடத்துவமான பயிற்சியளிப்பினூடாக வட பிராந்தியத்தின் கிரிக்கட்டுக்கு வலுவூட்டல்

விசேடத்துவமான பயிற்சியளிப்பினூடாக வட பிராந்தியத்தின் கிரிக்கட்டுக்கு வலுவூட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures