Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்!

December 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சரியான விடயத்தை செய்யக்கூடியவர் யார் | கருத்துக்கணிப்பில் மக்கள் தகவல்

இலங்கை மின்சார சபையின் எரிபொருள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொது விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தியுடன் முன்னெடுப்பது தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தமது கட்சியின் தொழிற்சங்க உறுப்பினரான வசந்த சமரசிங்கவுடன் இந்த விவாதத்தை மேற்கொள்ளுமாறு இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்திருந்த நிலையில், அதனை கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின்அஎரிபொருள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

பொது விவாதத்துக்கு அழைப்பு

இதனை ஏற்றுக் கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொது விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்! | Kanchana Wijesekara Rejets Anura Kumara Parliament

இந்த நிலையில், பொது விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி தயார் என இன்று நாடாளுமன்றில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் தொழிற்சங்க உறுப்பினரான வசந்த சமரசிங்க தொடர்பில் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வசந்த சமரசிங்க தயாராக இருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமாரவின் யோசனையை நிராகரித்த கஞ்சன

இந்த பின்னணியில், அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த யோசனையை தாம் நிராகரிப்பதாக கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்! | Kanchana Wijesekara Rejets Anura Kumara Parliament

அத்துடன், தொழிற்சங்க உறுப்பினர் ஒருவருடன் விவாதிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது விவாதத்துக்கு அநுரகுமார திஸாநாயக்க ஆயத்தமானால் தாமும் அதற்கு ஆயத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது கட்சி இந்த விவாதத்துக்கு ஆயத்தமாக இருப்பதாகவும் கட்சி சார்பில் வசந்த சமரசிங்க முன்னிலையாவார் எனவும் அநுரகுமார தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு பதிலாக மற்றுமொருவர்

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பதிலாக மற்றுமொருவர் முன்னிலையாவதை போல், குறித்த விவாதத்துக்கு தாமும் மற்றுமொருவரை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்! | Kanchana Wijesekara Rejets Anura Kumara Parliament

மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொருவரை அவர் வேட்பாளராக முன்வைப்பார் எனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

Previous Post

சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி!

Next Post

பாடசாலை மாணவர்களுக்கு நற்செய்தி: சலுகை விலையில் வழங்கப்படவுள்ள பயிற்சி புத்தகங்கள்

Next Post
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலை மாணவர்களுக்கு நற்செய்தி: சலுகை விலையில் வழங்கப்படவுள்ள பயிற்சி புத்தகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures