Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா விநியோகிக்கப்படும்

December 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா விநியோகிக்கப்படும்

சுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன்.

அதே பிரச்சினைகளை வியாழக்கிழமை (30) சுட்டிக்காட்டுகிறேன். திரிபோஷா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு கவலையடைய வேண்டும்.

திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம்  வலியுறுத்தினார்.

திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அடுத்த மாதம் முதல் தடையில்லாமல் திரிபோஷா விநியோகிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய,

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் சுகாதாரத்துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

சுகாதார கட்டமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் முறைகேடான செயற்பாடுகளினால் இலவச சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது.

சுகாதாரத்துறையின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றிய வகையில் தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் இலவச சுகாதார துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். எதிர்காலத்திலும் முறைகேடான செயற்பாடுகள்  இடம்பெறாது.

சுகாதார துறையில் தற்போது நிலவும் அடிப்படை பிரச்சினைகளை  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின் போது சுட்டிக்காட்டினேன்.

ஆனால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் நிர்வாகத்தின் கீழ் தீர்வு கிடைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு காண வேண்டும்.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.3 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு திரிபோஷா வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது.ஆகவே திரிபோஷா விநியோகம் மீண்டும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் முதல் திரிபோஷா விநியோகம்  தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றார்.

Previous Post

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் | வடிவேல் சுரேஷ்

Next Post

AI தொழில்நுட்பத்தில் உருவான எம்.ஜி.ஆர்.

Next Post
AI தொழில்நுட்பத்தில் உருவான எம்.ஜி.ஆர்.

AI தொழில்நுட்பத்தில் உருவான எம்.ஜி.ஆர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures