மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக தொடர்ந்தும் பண்ணையாளர்கள் வீதியில் போராடுகின்ற இந்நிலையிலே வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து பெரும்பான்மையினத்தவர்கள் கொலை செய்கிறார்களென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(20.11.2023) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும்,கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில் பல இடங்கள் இருக்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவற்றை நிவர்த்தி செய்ய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என பகல் கனவு கண்டு வாக்களித்திருந்தனர்.
இதில் தெரிவ செய்யப்பட்ட இரண்டு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இவ்வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்தில் எந்தவொரு முன்மொழிவும் வைக்கப்படவில்லை.
கடந்த மூன்று வருடங்களாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு கிழக்கு மாகாணத்திற்கு எந்தவொரு பயனுமில்லாத வெறும் அமைச்சு பதவிகளை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.