இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் மற்றும் அமலா பால் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றை தனுஷ் படமாக்கியுள்ளதாகவும் பிரபுதேவா அதற்கு நடனம் அமைத்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
