Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

October 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று (05.10.2023) அதிகாலை மட்டக்களப்பு 5ம் ஒழுங்கை நாவற்குடாவில் அமைந்துள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம் | Suspect Death Who Murder Joseph Pararajasingham

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டு தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு விடுதலை 

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து ரி.எம்வி.பி கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவந்த கஜன்மாமா மற்றும்  பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் உட்பட 5 பேர் 2015 ஆம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு குறித்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post

மஹீஷ் தீக்சன உலகக் கிண்ண கிரிக்கெட் குழுவில் இடம்பெறுவது உறுதி

Next Post

இலங்கையின் அவப்பெயரை தில்லாக உறுதி செய்தார் ரணில்: சாணக்கியன் சாடல்

Next Post
‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி

இலங்கையின் அவப்பெயரை தில்லாக உறுதி செய்தார் ரணில்: சாணக்கியன் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures