இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சர்வதேச விமான சேவை அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடிக்கு மேலான உயரத்தில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
விமான சேவை அதிகார சபை வேண்கோள்

இந்நிலையில் இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பறக்கும் பொருட்களையோ அல்லது அதுபோன்ற சாதனங்களையோ பறக்கவிட முடியாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற பொருட்களை அப்பகுதியில் பறக்கவிடுவது விமானங்களுக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ளனர்
மேலும் விமான பயனத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் இடயூறு விளைவிக்கும் வகையிலும் பட்டம் பறக்க விடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு விமான சேவை அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.