பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் விமானங்கள் மற்றும் மூன்று மேலதிக நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்யும் திட்டங்களுக்கு மத்தியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உருவாக்கி வரும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் இந்தியன் மல்டிரோல் ஹெலிகொப்டர் ஆகியவற்றுக்கான என்ஜின்களை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டங்கள் குறித்து பிரான்ஸ் நிறுவனங்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உருவாக்கிவரும் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களுக்கான உயர் ஆற்றல் கொண்ட எஞ்சின்களை இணைத்து உருவாக்குவது குறித்து பிரான்ஸ் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக இந்திய தரப்புகள் கூறுகின்றன.
பிரான்ஸ் தரப்புகளால் வழங்கப்படும் விமான எஞ்சின் தொழில்நுட்பத்தின் 100 சதவீத பரிமாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் துறை பங்கேற்பையும் இது உள்ளடக்கியிருக்கலாம்.
வலுவான இயந்திரங்கள் தேவைப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் விஜயத்தின்போது, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை விண்வெளி, தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.