Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்துங்கள் | த.தே.ம.மு

July 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்துங்கள் | த.தே.ம.மு

தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்த வேண்டும் என கோருகின்ற கடிதமொன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை (10) இந்திய துணைத் தூதுவரிடம் கையளிக்கவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியில், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் இவ்வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வினையே இந்தியா வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்குப் பொறுப்பான அதிகாரி ராகேஷ் நட்ராஜ் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேண்டாம் எனவும், அதனை இந்தியா வலியுறுத்தக்கூடாது எனவும் தொடர்ச்சியாகக் கூறிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றும், அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது இதுகுறித்து அவரிடம் எடுத்துக்கூறியிருந்ததாகவும், ‘இந்திய – இலங்கை ஒப்பந்தம் வேறு, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் வேறு’ என்ற விடயத்தை விசேடமாக சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய – இலங்கை ஒப்பந்தம்தான் இந்தியாவின் நேரடித் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும், 13ஆவது திருத்தம் என்பது அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பேரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி ரணிலுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு – நாமல்

Next Post

உலகக் கிண்ண தகுதிகாண் சிறப்பு அணியில் பெத்தும், ஹசரங்க, தீக்ஷன

Next Post
உலகக் கிண்ண தகுதிகாண் சிறப்பு அணியில் பெத்தும், ஹசரங்க, தீக்ஷன

உலகக் கிண்ண தகுதிகாண் சிறப்பு அணியில் பெத்தும், ஹசரங்க, தீக்ஷன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures