Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும் | சம்பிக்க

June 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும் | சம்பிக்க

பொருளாதார பாதிப்புக்கு தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும்.

கடன் மறுசீரமைப்பின் தாக்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு பின்னரே வெளிப்படும். ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் தற்போதைய இயல்பு நிலை தற்காலிகமானதே.வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத காரணத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

4.5 பில்லியன் டொலர் அரசமுறை கடன்களை செலுத்துவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது.தற்போது 3 பில்லியன் டொலர்கள் மாத்திரமே வெளிநாட்டு கையிருப்பில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 1.5 பில்லியன் டொலர் சீனாவினால் வழங்கப்பட்ட கடனாகும்.அந்த கடன் இருப்பை பாவிக்க முடியாது.ஆகவே தற்போதும் வெளிநாட்டு கையிருப்பின் தன்மை நிலையற்றதாக உள்ளது.

வரிசை யுகம்,பழைய முரண்பாடுகள்,பழைய கலவரங்கள் மீண்டும் தோற்றம் பெறும்.ஆகவே தற்போதைய நிலைமையை சரி என்று குறிப்பிட முடியாது.

நெருக்கடிகளுக்கு தற்காலிக இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியாக திட்டத்தை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். தற்போது தேசிய கடன் செலுத்தப்படுகிறது,வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படுவதில்லை.

கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் வட்டியுடன் வெளிநாட்டு கடன்களை நிச்சயம் செலுத்த நேரிடும்.2024 ஆம் ஆண்டு கடன் மறுசீரமைப்புடன் தோற்றம் பெறும் மாறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பக்கப்படும் போது ஊழியர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.உழைக்கும் மக்களின் மீது பொருளாதார பாதிப்பின் சுமை திணிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வட்டி வீதம் தொடர்பில் தற்போது விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

பணவீக்கம்,வட்டி வீதம் ஏன் அதிகரிக்கப்பட்டது.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 3 ரில்லியன் ரூபாய் நாணயங்களை அச்சிட்டார்.

நாணயம் அச்சிடுவதை வரையறை செய்யுமாறு கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்திய போது அப்போதைய நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் நாணயம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது என பாராளுமன்றத்தில் பொறுப்பற்ற வகையில் உரையாற்றினார்.

பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி விட்டு தற்போது அவர் சுகபோகமாக வாழ்கிறார்.ஆனால் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக் கூற தேவையில்லாதவர்கள் தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார பாதிப்பால் மூளைசாலிகள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன் வட்டி வீதம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் மிகுதியாகவுள்ள தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் துரிதமாக செயற்பட வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களையும்,தொழில் முயற்சியாளர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

படித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு அறிவார்ந்தவர்களற்ற பாலைவனம் போல் மாற்றம் பெறும்.அதன் பின்னர் எவர் நாட்டை ஆட்சி செய்தாலும் ஒருபோதும் முன்னேற முடியாது என்றார்.

Previous Post

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது | எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தாய் மரணம் | மூவர் வைத்தியசாலையில்

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தாய் மரணம் | மூவர் வைத்தியசாலையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures