Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படுகின்றது! அரசாங்கத்தின் அறிவிப்பு

June 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (07) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு  இராஜாங்க அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட அரசு பல்வேறு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது. பெரும்பான்மை மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தொகை அதிகரிப்பு

புதிய வரிகளை அறிமுகப்படுத்தி, வட்டி விகிதங்களை உயர்த்தி, இறக்குமதி கட்டுப்பாடுகளை அதிகரித்து, வருமான அளவை உயர்த்தவும்,  அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படுகின்றது! அரசாங்கத்தின் அறிவிப்பு | Import Ban On 300 Items Is Lifted

அரசு எடுத்த முடிவுகளின் பலன்கள்  ஏற்கனவே கிடைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் தொகை அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட பணம் 24.9 மில்லியன் டொலர்கள் மற்றும் இந்த வருடத்தின் அதே காலப்பகுதியில் இலங்கைக்கு 45.4 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

பணவீக்கம் 70% லிருந்து 25.5% ஆக குறைந்துள்ளது. அந்நிய கையிருப்பு 3 பில்லியன் டொலராக  உயர்ந்துள்ளது. வங்கி வட்டி விகிதங்களும் 2.5% குறைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தின் பலனையும் மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த தடைகள் நீக்கப்படும் என குறிப்பிட்டார். 

Previous Post

சடுதியாக குறைந்த உணவுப் பொருட்களின் விலை

Next Post

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

Next Post
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures