Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

May 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு  தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார்.

விஜேந்திரகுமார் – மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை | Elam Student American Space Feat

NSS அமைப்பின் தலைமை

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26, 725 பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப்பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

சிறந்த முன்னுதாரணம்

இன்று சாதனை மாணவனாகப் பாராட்டுப்பெறும் அர்ச்சிகன் தாயகத்திலிருந்து தனது பெற்றோரோடு அனைத்தையும் இழந்து, வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இம்மாணவனின் சாதனை எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

Previous Post

கொரோனா கால பணி விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலியா: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பா? 

Next Post

தையிட்டி பௌத்த விகாரையை யாழ். மக்களிடமே ஒப்படைக்க நாம் தயார்! தேரர் அதிரடி கருத்து

Next Post
தையிட்டி பௌத்த விகாரையை யாழ். மக்களிடமே ஒப்படைக்க நாம் தயார்! தேரர் அதிரடி கருத்து

தையிட்டி பௌத்த விகாரையை யாழ். மக்களிடமே ஒப்படைக்க நாம் தயார்! தேரர் அதிரடி கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures