Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செப்டம்பருக்குள் நாடு ஸ்திரநிலையை அடையும் | ரணில்

May 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளது | ஜனாதிபதி

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமான வாழக்கூடியவாறு நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலை – அரநாயக்க ‘அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்’ பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட சனிக்கிழமை (20) நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

2018இல் பிரதமராக இருந்தபோது இந்த குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர்த் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கபீர் ஹசீம் அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த குடிநீர் திட்டத்தால் சுமார் 2 இலட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். இந்த குடிநீர் திட்டத்துக்கு உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை. நாட்டில் இருந்த முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறான சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. 

இவ்வாறான சூழ்நிலையில் நான் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்று, சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளேன். ஏனென்றால், சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் பெருமையுடன் கண்ணியமாக வாழவே விரும்புகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடினமான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், எங்களுக்கு வேறு மாற்றுவழிகள் இருக்கவில்லை. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இதேபோன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அங்கு ஓர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் – வாங்கல்களில்  இருந்து விலகியது. ஆனால், நாம் சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்று சரியான முகாமைத்துவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்து, பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.

இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர். 

இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால், அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Previous Post

ஜனாதிபதியே நாட்டை மீட்டெடுத்தார் | அவர் தலைமையில் நாடு முன்னேறும் | ஜீவன்

Next Post

எல்சல்வடோரில் கால்பந்தாட்ட போட்டியில் தள்ளுமுள்ளு | 12 பேர் உயிரிழப்பு!

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

எல்சல்வடோரில் கால்பந்தாட்ட போட்டியில் தள்ளுமுள்ளு | 12 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures