Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய நியமனங்களுக்கு இடமளித்து ஆளுனர்கள் பதவி விலகுவதே ஒழுக்கமானது

May 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய நியமனங்களுக்கு இடமளித்து ஆளுனர்கள் பதவி விலகுவதே ஒழுக்கமானது

ஜனாதிபதியொருவர் பதவி விலகும் போது அவரால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களும் பதவி விலகுவது சம்பிரதாயமாகும். ஆனால் தற்போதுள்ள ஆளுனர்கள் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் சென்று புகாரளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றை தவிர்த்து புதிய நியமனங்களுக்கு இடமளிப்பதே ஒழுக்கமான செயலாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலத்தில் கிழக்கு ஆளுனராக செயற்பட்டிருக்கின்றேன். எனினும் கடந்த 2020 ஆட்சி மாற்றத்தின் பின்னர் , புதிய ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்துக்கமைய அவர் விரும்பும் ஆளுனர்களின் நியமனத்துக்கு இடமளிக்கும் வகையில் நான் எனது பதவியை இராஜிநாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தேன்.

மாகாணசபைகள் , பிரதேசசபைகள் உள்ளிட்டவற்றுக்கென பதவி காலம் காணப்படுவதைப் போன்று ஆளுனர்களுக்கும் நியமனம் பெற்றதிலிருந்து 5 ஆண்டுகள் பதவி காலம் காணப்படுகின்றன. எனினும் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான அவர்கள் , புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் போது தாமாக பதவி விலகுவது ஒரு சம்பிரதாயமாகும்.

அதன் அடிப்படையிலேயே தற்போதுள்ள ஆளுனர்கள் சிலருக்கு பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கக் கூடும். எனினும் அவர்களில் சிலர் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் , சிலர் வேறு அரசியல் தலைவர்களிடம் சென்று புகாரளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் இது ஒழுக்கமான விடயமன்று. ஜனாதிபதிக்கு அவர் விரும்புபவர்களை பிரதிநிதிகளை ஆளுனர்களாக நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் ஒவ்வொருவரும் பதவி விலகுவதே ஒழுக்கமாகும் என்றார்.

Previous Post

உலகின் மிக முக்கிய புலிட்சர் விருதுக்கு இலங்கையர் பரிந்துரை

Next Post

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

Next Post
பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures