சவுதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் சகோதர மற்றும் நட்பு நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 208 பேர்களும் வியாழக்கிழமை (4) மாலை மன்னரின் “தாயிப்” கப்பல் மூலம் ஜெத்தா நகரை வந்தடைந்தனர்.
அவர்கள் நோர்வே, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, துருக்கி, எரித்திரியா, எகிப்து, மால்டா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஹோலந்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் சவுதி அரேபியா அதீத ஆர்வம் காட்டி வருகிறது.
வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 104 நாடுகளைச் சேர்ந்த 6073 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். (246 சவூதி பிரஜைகள் மற்றும் 5827 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).