Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

April 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் வழக்கின் தீர்ப்புகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கில் பொலிஸார் இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள். 

ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை. யாரென்று தெரியாது தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக சொல்கின்றனர்.

கடந்த தினத்தில் மேலதிகமாக அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கமைவாக இன்று குறித்த இடத்தில் நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை அவர்களே சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொல்லியலுக்குரிய பிரதேசமென்றும் இன்று நாங்கள் செய்த விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்கு அரச சட்டத்தரணியும் உதவியை நாடியுள்ளதாகவும் அதற்காக பிறிதொரு தினத்தையும் கேட்டிருந்தார்கள்.

எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உ உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள். மரத்தையோ, கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது. அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது. 

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும், பொலன்நறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது. இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார். 

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உடைக்கப்பட்ட சிலைகளை மீள கட்டுவது சம்பந்தமாக தொல்லியல் பிரதேசம் என்ற காரணத்தினாலே மீள் அமைப்பதும் தொல்லியல் என்ற காரணத்தினாலும் அரச சட்டத்தரணியும் வந்த பிறகு ஒரு விண்ணப்பத்தை செய்வதாக சொல்லியிருக்கின்றேன் என தெரிவித்தார்.

Previous Post

ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள் – சிவசக்தி ஆனந்தன்

Next Post

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Next Post
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures