Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

April 19, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இலங்கைக்கும் அயார்லாந்துக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்களுக்குள் நிறைவுபெற்றது.

திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோர் குவித்த சதங்களும் ப்ரபாத் ஜயசூரியவின் 10 விக்கெட் குவியலும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

இந்தப் போட்டி முடிவுடன் அயர்லாந்து தான் இதுவரை விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 448 பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 6 விக்கெட்களை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றதுடன் அயர்லாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து கடைசி 3 விக்கெட்களை 26 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த லோர்க்கன் டக்கர் 3ஆம் நாள் காலை திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது அயர்லாந்தின் கடைசி 3 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.

இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். விஷ்வா பெர்னாண்டோ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 168 ஓட்டங்களாக இருந்தது.

ஒரு கட்டத்தில் அயர்லாந்து 5 விக்கெட்களை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால், ஹெரி டெக்டர் (42), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (30), ஜோர்ஜ் டொக்ரல் (32), அண்டி மெக்ப்றைன் (10), மார்க் அடயார் (23 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அயர்லாந்து 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனிடையே தனது 11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரொமேஷ் மெண்டிஸ் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார். இதுவரை அவர் 51 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன் தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது தடவையாக 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். 

ப்ரபாத் ஜயசூரிய இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 43 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அடுத்த டெஸ்ட் போட்டியில் மேலும் 7 விக்கெட்களைக் கைப்பற்றினால் அதிவேகமாக 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிலைநாட்டுவார்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: 591 – 6 விக். டிக்ளயார்ட் (திமுத் கருணாரட்ன 179, குசல் மெண்டிஸ் 140, சதீர சமரவிக்ரம 104 ஆ.இ., தினேஷ் சந்திமால் 102 ஆ.இ., கேர்ட்டிஸ் கெம்ஃபர் 84 – 2 விக்.)

அயர்லாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (லோக்கன் டக்கர் 45, டேம்ஸ் மெக்கலம் 35, ஹெரி டெக்டர் 34, ப்ரபாத் ஜயசூரிய 52 – 7 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 – 2 விக்.)

அயர்லாந்து (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 168 (ஹெரி டெக்டர் 42, ஜோர்ஜ் டொக்ரல் 32, கேர்ட்டிஸ் கெம்ஃபர் 30, மார்க் அடயார் 23 ஆ.இ., ரமேஷ் மெண்டிஸ் 76 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 56 – 3 விக்., விஷ்வா பெர்னாண்டோ 3 – 2 விக்.)

Previous Post

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்கள் வென்றார்

Next Post

பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இணக்கம்

Next Post
பால் மாவின் விலை அதிகரிக்கிறது

பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures