அணுவாயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகள் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வட கொரியாவிடம் ஜி7 அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற, ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
திண்ம எரிபொருளில் இயங்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை தான் வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்த சில தினங்களின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘மேலதிக அணுவாயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தொழழல்நுட்ப சோதனைகள் ஆகியவை உட்பட எந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வட கொரியாவை நாம் வலியுறுத்துகிறோம்’ என ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.