உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார்.
கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின் பங்குபற்றினார் என ரஷ்ய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது.
எனினும் எப்போது இச்சந்திப்பு நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை.
கேர்சன் பிராந்தியத்தின் தலைநகரான கேர்சன் உட்பட அப்பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தன.
2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது உக்ரேனிய மாநகரம் கேர்சன் ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் கேர்சனிலிருந்து ரஷ்ய படையினர் வெளியேற ஆரம்பித்து, டினிப்ரோ நதிக்கு மறுகரையில் திரண்டிருந்தனர்.