மியன்மாரில் சுமார் 3,015 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மியன்மார் புது வருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகளுக்கு இராணுவ அரச நிர்வாகப் பேரவையின் தலைவர் ஜெனரல் மின் ஆங் லைங் மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு அளித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
98 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் போன்ற கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பது தொடர்பில் விளக்கப்படவில்லை.
2021 ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.