அவுஸ்திரேலியாவின் ஆகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நகரம் என்ற பெருமையை சிட்னியிடமிருந்து மெல்பேர்ன் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, 2021 ஜூன் மாதத்தில் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்பேர்ன் நகரின் சனத்தொகை 4இ875இ400 ஆகும். இது நியூ சௌத் வேல்ஸ் மாநில தலைநகரான சிட்னியின் சனத்தொகையைவிட 18,700 அதிகமாகும்.
மெல்பேர்னின் சனத்தொகை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மெல்பேர்ன் நகரின் எல்லை மீள் நிர்ணயம் காரணமாக அந்நகரின் சனத்தொகையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்டன் பிரதேசமும் அண்மையில் மெல்பேர்ன் நகருக்குள் உள்ளடக்கப்பட்டது. இதையடு;த்து மெல்பேர்னின் சனத்தொகை சிட்னியைவிட அதிகரித்துள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தின் பின்னர் சனத்தொகையில் சிட்னியை மெல்பேர்ன் விஞ்சியுள்ளது.
1905 ஆம் ஆண்டுவரை சிட்னியைவிட மெல்பேர்னின் சனத்தொகை அதிகமாக இருந்தது. அதன் பின்னர் அப்பெருமை சிட்னியின் வசம் இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சிட்னியை மெல்பேர்ன் விஞ்சியுள்ளது.