Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதில் நெருக்கடி | கல்வி அமைச்சர்

March 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு | கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்துள்ளன. இதனால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும். 

எனவே, சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

மட்டக்குளி புனித ஜோன் மகா வித்தியாலயத்தில் இன்று (13) திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரு வாரங்கள் கால தாமதமடைந்துள்ளன. 

இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் பிரதானமானது வரி தொடர்பானதாகும். 

இது தொடர்பில் நாம் நிதி அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றோம்.

இதேபோன்று அவர்களின் ஏனைய நிபந்தனைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின்போது வழங்கப்படும் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரித்து, அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதோடு, உரிய தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் ஆரம்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கால தாமதமடைந்துள்ளமையால், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்படும். 

இதன் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு சாதாரண பரீட்சைகளும் தாமதமடையும்.

பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மக்களின் உரிமை மீறப்படுகிறது. இது தொடர்பில் எவரும் கருத்துக்களை வெளியிடுவதில்லை. 

மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் அனைத்தும் முன்னதாக மாணவர்களின் உரிமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

Previous Post

எரிபொருள் விலை குறைவடைந்தால் பஸ் கட்டணத்தை குறைப்போம்

Next Post

பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்கள்

Next Post
பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்கள்

பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures