கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.