Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு: மகிந்த

February 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நான் எதிர்க்கவில்லை,13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமையில் 13 தொடர்பில் பேசுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம்

கண்டியில் கடந்த 24ஆம் திகதி கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தாங்கள் கடந்த காலங்களில் 13 பிளஸ் எனத் தெரிவித்துவிட்டு இப்போது அது தேவையில்லை என்று குறிப்பிடுவதற்கான காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எரிகின்ற வீட்டில் பெட்ரோல் ஊற்ற நான் விரும்பவில்லை. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு எதிராக தேரர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு: மகிந்த | My Stand Is 13 Plus Rather Than 13 Mahinda

இந்நிலையில், 13ஐ ஆதரிக்கும் கருத்தை நான் தற்போது வெளியிட்டு நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை. அதற்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு நான் எதிர்ப்பு என்று அர்த்தமல்ல.

தேசிய இனப்பிரச்சினை

13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Previous Post

வடக்கில் கடல் ஆக்கிரமிப்பை நிறுத்துக! | கடற்தொழிலாளர் சமாசங்கள் கோரிக்கை

Next Post

பிரேம்ஜி அமரன் நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டீசர் வெளியீடு

Next Post
பிரேம்ஜி அமரன் நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டீசர் வெளியீடு

பிரேம்ஜி அமரன் நடிக்கும் 'சத்திய சோதனை' படத்தின் டீசர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures