அகில உலக சுப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’. இதில் நடிகர்கள் மிர்ச்சி சிவா, மாகாபா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், மனோ, ஷாரா, நடிகைகள் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் கைபேசி ஆகியவற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.