இலங்கையில் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் சந்தையில் அதிகரித்துள்ள இறக்குமதி பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் உள்ளூர் வியாபாரிகள் வழங்கும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.