தலைவர் அருட்தந்தை இமானுவேல் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லையென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான், முன்பே சொல்லியிருக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இலட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். அவ்வாறான கருத்து பிழையென்றே,என்னால் கூற முடியும் என்றும் அருட்தந்தை இமானுவேல் சுட்டிக்காட்டினார்.