நியூ ஸிலாந்தில் இன்று தாக்கிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூ ஸிலாந்தின் வட தீவிலுள்ள 5 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டின் 4.1 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பபுகுதியினர் அப்பிராந்தியங்களில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புயல் காரணமாக, கடும் மழை பெய்ததுடன், மரங்கள் வீழ்ந்ததால், 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.