பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.
ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.