அரசு சாரா நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டை எளிதாக்குவதற்காக விண்வெளித் துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் ஒரு தேசிய விண்வெளிக் கொள்கை இந்திய அரசின் இறுதி ஒப்புதலின் செயல்பாட்டில் உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
விண்வெளி ஸ்டார்ட்-அப்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களுக்கு ஆரம்ப நிதியுதவியை வழங்க புதிய நிதி திட்டத்துக்கு இன்-ஸ்பேஸ் வாரியம் அனுமதி அளித்துள்ளது என்றும் கூறினார்.
இன்று வரை விண்வெளித்துறையில் 135 அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து 135 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விபரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
2021/22 நிதியாண்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 2,114 கோடி ரூபா மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
2021/22 நிதியாண்டில், ஏவுதள சேவைகள், தரவு விற்பனை, சுற்றுப்பாதையில் ஆதரவு சேவைகள் மற்றும் ஏவுதலுக்கு பிந்தைய செயற்பாடுகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்காக 174.90 கோடி ரூபா வருவாய் ஈட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அத்துடன் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு இஸ்ரோ வசதிகளை பயன்படுத்த விண்வெளி நிறுவனங்கள், இஸ்ரோ வளாகங்களுக்குள் வசதிகளை நிறுவுதல், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவுதல், வழிகாட்டி ஆதரவு ஆகியவை விண்வெளித்துறை சீர்திருத்தங்களின் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளன என்றார்.